Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: சாமி ஊர்வல பக்தர்கள் சாலை மறியல்

புதுக்கடை: சாமி ஊர்வல பக்தர்கள் சாலை மறியல்

0

புதுக்கடை அருகே அம்சி பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை, சாமி விக்கிரகங்கள் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக சென்றன. போலீசார் மேளதாளமின்றி செல்ல வற்புறுத்தியதால், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பக்தர்கள் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீசார் ஊர்வலத்தை வழக்கம்போல் செல்ல அனுமதித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version