Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: பள்ளி மாணவி மீது பைக் மோதல்

புதுக்கடை: பள்ளி மாணவி மீது பைக் மோதல்

0

தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் பத்மா மகள் ரெஜிஸ்மா (13). இவர் கீழ்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் பள்ளிக்கூடம் செல்வதற்காக பஸ்சிலிருந்து இறங்கி பள்ளி நோக்கி சாலையில் நடந்து செல்லும்போது, வேகமாக வந்த பைக் ஒன்று மாணவியை மோதி தள்ளியது. இதில் மாணவி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மாணவியை காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். புதுக்கடை போலீசார் பைக் ஓட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version