புதுக்கடை: கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்ட முகாம்

0
336

தமிழக அரசு அறிவித்த போலீஸ் அக்கா திட்ட விழிப்புணர்வு முகாம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரையின்  பேரில் புதுக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாலுமூடு கல்வியல் கல்லூரி, முஞ்சிறை சித்த மருத்துவ கல்லூரி, வேங்கோடு பெதனி கல்வியியல் கல்லூரி போன்றவற்றில் நேற்று நடைபெற்றது.  

     முகாமில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மாணவ மாணவிகளிடம் திட்டத்தின் சிறப்பு குறித்தும் அதன் நன்மைகள், பாதுகாப்புக்குகள் குறித்தும் விளக்கி பேசினார். முகாமில் கல்லூரி நிர்வாகிகளும், ஏராளமான  மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் புதுக்கடை போலீசாரம் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here