புதுக்கடை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அந்த பாரில் சோதனை நடத்தினர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியும், அரசு அனுமதியின்றி இளைஞர்களுக்கு சில்லறை மது விற்பனை நடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 180 மில்லி கொள்ளளவுள்ள 37 பாட்டில்களில் மது பானங்கள் பறிமுதல் செய்து கொல்லங்கோடு பகுதி ராஜேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் ரொக்கம் 779 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.














