மணலிக்கரையை சேர்ந்தவர் சோபின். இவர் காரில் புஷ்பலதா என்பவரை உட்கார வைத்து புதுக்கடை பகுதி வழியாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிவான் ஒன்று மோதியதால் சோபினுடைய கார், முன்னால் நின்ற அரசு பேருந்தில் மோதி பேருந்தின் பின் பகுதி சேதம் அடைந்தது. காயமடைந்த புஷ்பலதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வான் டிரைவர் ராபின்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.














