புதுக்கடை அருகே உள்ள அஞ்சு கண்ணுகலுங்கு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகில் அதே பகுதி வட்டப் பள்ளி விளை முருகேசன் (66) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள அரசு லாட்டரிகளுடன் பிடிபட்டார். அவரிடம் இருந்து 6 லாட்டரி சீட்டுகள், ரூ. 1,140 -ம் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தனர்.














