Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: கணவனுடன் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி

புதுக்கடை: கணவனுடன் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி

0

புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). இவர் முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார். இவர் நேற்று (பிப்.11) காலை தனது மனைவி ஹரிஷ்மா, 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக சந்திப்பில் வைத்து பைக்கைத் திருப்புவதற்காக நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 நபர்கள் திடீரென ஹரிஷ்மா கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை இழுத்துப் பறிக்க முயற்சித்துள்ளனர். உடனே ஹரிஷ்மா சத்தமிட்டு, தங்க சங்கிலியை இறுகப் பிடித்ததால் திருடர்கள் கையில் சங்கிலி கிடைக்கவில்லை.

உடனே திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக அர்ஜுன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட முயன்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version