புதுக்கடை: தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை

0
206

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி மினி மோள் ( 28).   இவர்களுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு திருமணம்  நடந்தது. திருமணத்திற்கு பின் மினிமோளிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்து 2008 ஆம் ஆண்டு மினி மோள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுரேஷ், மாமனார் அர்ஜுனன் (70) உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா கோர்ட்டில் (குழித்துறை முகாமில் ) நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் சுரேஷ், அர்ஜுனன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ. 2 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here