புதுக்கடை அருகே உள்ள விழுந்தையம்பலம் பகுதி குமரி நகரை சேர்ந்தவர் தர்மர் மகன் சுனில் குமார் (37). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவ தினம் அந்த பகுதியை சேர்ந்த ரவி (52) என்பவர் மதுபோதையில் சுனில் குமாரின் தந்தை தர்மரின் கல்லறையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுனில் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














