Home கன்னியாகுமரி செய்திகள் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

0
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நின்று செல்லாததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே உள்ள முக்கிய பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நின்று செல்லவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.
‎
இந்தப் பேருந்து நிறுத்தத்தை கோட்டார், செட்டிகுளம், திங்கள்சந்தை, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, கன்னியாகுமரி, பறக்கை, மணக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும், ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் முதியவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
‎
‎எனவே கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கட்டாயம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் பேருந்துகள் முறையாக நின்று செல்வதைக் கண்காணிக்க அந்த பகுதியில் சிசிடிவி கேமரா அல்லது போக்குவரத்து போலீசார் நியமிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version