Home மாநில செய்திகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு

0

நீட் தேர்வை ரத்து செய்ய வலி​யுறுத்தி திரா​விடர் கழகம் ஒருங்​கிணைப்​பில் நாளை தமிழகம் முழு​வதும் நடை​பெறும் கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சிகள் பங்​கேற்​ப​தாக அறி​வித்​துள்​ளன.

இதுதொடர்​பாக, அக்​கட்​சி​கள் வெளி​யிட்ட அறிக்​கை​கள்:

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: சமீபத்​தில் நடந்து முடிந்த நீட் ​தேர்​வில் மிகப்​பெரிய மோசடி நடை​பெற்று பல லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் கடும் பாதிப்​பு​களுக்கு உள்​ளாகி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், நீட் தேர்வை ரத்து செய்​யக்​கோரி திரா​விடர் கழகத்​தின் ஒருங்​கிணைப்​பில் நாளை (16-ம் தேதி) தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் கண்டன ஆர்ப்​பட்​டம் நடை​பெறுகிறது. இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இளநிலை மருத்​துவ மாணவர் சேர்க்​கைக்கு மத்​திய அரசு அறி​முகப்​படுத்​திய நீட் தேர்வு முறை தமிழக மாணவர்​களை கடுமை​யாக பாதித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் அண்​மை​யில் நடந்த நீட் தேர்​வில் வினாத்​தாள் கசிந்து விட்​ட​தாகக் கூறி, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு 22 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோரின் எதிர்​காலம் நிலை குலைத்​துள்​ளது.

இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலி​யுறுத்தி நாளை தமிழகம் முழு​வதும் திரா​விடர் கழகம் ஒருங்​கிணைக்​கும் கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் இந்​தி​யக் கம்​யூனிஸ்டு கட்சி கலந்து கொள்​ளும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version