பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு

0
14

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்​புப் பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரை அரசு குவித்​துள்​ளது. மேலும், அங்கு இணை​யதள சேவை​யும் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனாலும், ஏஏசி அமைப்​பினர் தொடர்ந்து போராட்​டங்​களை முன்​னெடுத்து வரு​கின்​றனர். 38 அம்ச கோரிக்​கை, அடிப்​படைக் கட்​டமைப்​புச் சீர்​திருத்​தங்​கள் ஆகிய​வற்றை வலி​யுறுத்தி ஏஏசி அமைப்​பினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முக்​கியப் பகு​தி​களில் நேற்​றும் போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

ஏஏசி அமைப்​பினர் நடத்​திய போராட்​டம் நேற்று வன்​முறை​யாக மாறியது. முசாப​ரா​பாத் நகரில் நடந்த வன்​முறைச் சம்​பவத்​தின்​போது சில போராட்​டக்​காரர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டுள்​ளனர். மேலும், அங்​கிருந்த போலீ​ஸார், வானை நோக்கி துப்​பாக்​கி​யால் சுட்டு கூட்​டத்​தினரைக் கலைத்​தனர். இந்த வன்​முறைச் சம்​பவங்​களில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக​வும், 22 பேர் காயமடைந்​துள்​ள​தாக​வும் பாகிஸ்​தான் செய்​தித் சேனல்​கள் தெரிவிக்​கின்​றன. போலீ​ஸார் சுட்​ட​தால்​தான் 2 பேர் உயி​ரிழந்​த​தாக, போராட்​டக் குழு​வைச் சேர்ந்த ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.

முக்​கி​யத் தலை​வர்: இதுகுறித்து அவாமி செயற்​குழு​வின் முக்​கிய தலை​வ​ராக விளங்​கும் சவு​கத் நவாஸ் மிர், முசாப​ரா​பாத்​தில் மக்​களிடையே கூறும்​போது, ‘‘எங்​கள் போராட்​டம் எந்​தவொரு அமைப்​புக்​கும் எதி​ரானது அல்ல. ஆனால் 70 ஆண்​டு​களுக்​கும் மேலாக எங்​கள் மக்​களுக்கு மறுக்​கப்​பட்ட அடிப்​படை உரிமை​களைத் தரவேண்டி இதை நடத்​துகிறோம். எங்​களுக்கு தேவை​யானவற்றை அரசு வழங்​கவேண்​டும். இல்​லா​விட்​டால், இங்கு வசிக்​கும் மக்​களின் கோபத்தை எதிர்​கொள்​ளத் தயா​ராக அரசு இருக்​கவேண்​டும்’’ என்​றார்.

போராட்​டத்​தைத் தடுப்​ப​தற்​காக பாகிஸ்​தான் அரசு நகரங்​களின் முக்​கிய சந்​திப்​பு​களை மூடி​யுள்​ளது. மேலும் முக்​கிய நகரங்​களில் கண்​காணிப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. நகரங்​களில் பதற்​ற​மான பகு​தி​களில் போலீ​ஸாரும், ராணுவத்​தினரும் ரோந்து சுற்றி வரு​கின்​றனர். இதனிடையே, ஏஏசி போராட்​டக்​குழு​வினருடன் அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. எனினும், இந்த பேச்​சு​வார்த்​தை தோல்வி அடைந்​துள்​ள​தாகத் தெரி​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here