பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. பி. ஐ. (எம்) மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் எம். பி. பெல்லார்மின், சி. பி. ஐ மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துகொண்டு பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
