Home மாநில செய்திகள் நகராட்சி நிர்வாக துறையில் உதவி செயற்பொறியாளர் 116 பேருக்கு பதவி உயர்வு

நகராட்சி நிர்வாக துறையில் உதவி செயற்பொறியாளர் 116 பேருக்கு பதவி உயர்வு

0

 தமிழகம் முழு​வதும் கடந்த 2024-ம் ஆண்டு நில​வரப்​படி நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் 102 செயற்​பொறி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக இருந்​தன.

தற்​போது அது அதி​கரித்​துள்​ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் 100 உதவி செயற்​பொறி​யாளர்​கள் மற்​றும்பிற மாநக​ராட்​சிகளில் பணி​யாற்​றும் 16 உதவி செயற்​பொறி​யாளர்​களுக்​கு, செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்க வேண்​டும் என்று நகராட்சி நிர்​வாகத்​துறை, அரசுக்கு கருத்​துரு அனுப்பி இருந்​தது.

இதற்​கிடை​யில் உதவி செயற்​பொறி​யாளர்​கள் 3 பேர், பதவி உயர்வு தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இந்​நிலை​யில், மேற்​கண்ட 116 உதவி செயற்​பொறி​யாளர்​களுக்கு தற்​காலிக​மாக செயற்​பொறி​யாளர் பதவி உயர்வு அளித்​து, அவர்​களுக்​கான பணி​யிடங்​களும் ஒதுக்கி அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version