Home சினிமா செய்திகள் Project Hail Mary – விமர்சனம்: கவித்துவ அனுபவம் தரும் விண்வெளிப் பயணம்!

Project Hail Mary – விமர்சனம்: கவித்துவ அனுபவம் தரும் விண்வெளிப் பயணம்!

0

ஹாலிவுட்டில் வெளியாகும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரிய நுணுக்கமான அறிவியல் கருத்துகள் மட்டுமின்றி மனதைத் தொடும் ஒரு கவித்துவமான அனுபவத்தையும் தந்திருக்கிறது ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’. பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோஃபர் மில்லர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், ஆண்டி வீயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

ரய்லண்ட் கிரேஸ் (ரையான் கோஸ்லிங்) என்னும் நபர் ஒரு விண்கலத்தில் கண்விழிக்கிறார். அவருக்குத் தனது கடந்த கால நினைவுகள் தெளிவற்றதாக இருக்கின்றன. தான் ஒரு விண்வெளி வீரரே அல்ல, ஒரு உயிரியல் ஆசிரியர் என்பது அவருக்கு மெல்ல நினைவுக்கு வருகிறது. சூரியனை அழித்துக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளைத் தடுத்து, உலகைக் காக்கும் ஒரு பயணத்தில் அவர் அனுப்பப்பட்டிருப்பது தெரியவருகிறது. 

இன்னொரு புறம் மற்றொரு கிரகத்திலிருந்து தனது உலகைக் காக்க வந்த ராக்கி எனும் விசித்திரமான உருவம் கொண்ட ஏலியனைச் சந்திக்கிறார். மொழி தெரியாத இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் எப்படித் தொடர்புகொண்டு, இணைந்து தங்கள் கிரகங்களைக் காக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதாபாத்திரப் படைப்பு. ரையான் கோஸ்லிங் தனது அசாத்தியமான நடிப்பால் படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார். அவர் ஒரு விண்வெளி வீரர் அல்ல என்பதால், விண்வெளியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர் வியக்கும் இடங்கள் அப்படியே பார்வையாளர்களான நமக்கும் கடத்தப்படுகின்றன. ‘ராக்கி’ கதாபாத்திரம், சமீபகால சினிமாக்களில் வந்த ஏலியன்களிலேயே மிகவும் அழகான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் அந்த எதிர்பாராத நட்புதான் படத்தின் ஆன்மா. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version