காற்று மாசுவை கட்டுப்படுத்த பிரியங்கா காந்தி கோரிக்கை

0
19

தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு தொடர்ந்து மோச​மாக உள்​ளது. டெல்​லி​யில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கை​யில் மாநில அரசு கடந்த வாரம் இறங்​கியது. ஆனால் காற்​றில் போதிய ஈரப்​ப​தம் இல்​லாத​தால் இந்த முயற்சி தோல்​வியடைந்​தது.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​.பி பிரி​யங்கா காந்தி எக்​ஸ்​ தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், “டெல்லி முழு​வதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோச​மாக இருந்​தது. இது குறித்து நாம் அனை​வரும் அரசி​யல் பாகு​பாடின்றி ஆலோ​சிக்க வேண்​டும். காற்று மாசுவை கட்​டுப்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த மோச​மான சூழலை போக்க எடுக்​கும் நடவடிக்​கைக்கு நாங்கள் ஒத்​துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்​தப் பதி​வில் பிரதமர் மோடி, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தா, மத்​திய சுற்​றுச்​சூழல் அமைச்​சர் பூபேந்​தர் யாதவ் ஆகியோரை​யும் இணைத்​து, டெல்லி காற்று மாசு பிரச்​சினைக்கு உடனடி நடவடிக்​கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here