“இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்” – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

0
15

இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. பட்​ஜெட்​டுக்​குப் பிந்​தைய இணை​ய​வழிக் கருத்​தரங்க தொடர் நேற்று தொடங்​கியது. “வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​கான தொழில்​நுட்ப சீர்​திருத்​தங்​கள் மற்​றும் நிதி” என்ற தலைப்​பில் நடை​பெற்ற முதலா​வது கருத்​தரங்​கில் பிரதமர் நரேந்​திர மோடி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு ஒவ்​வொரு ஆண்​டும் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டும் நாட்​டின் வளர்ச்​சிக்கு முன்​னுரிமை அளித்து பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளது.

குறிப்​பாக நாட்​டின் உள்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​தும் வகை​யில் மத்​திய பட்​ஜெட்​டில் பல்​வேறு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்டு உள்​ளன. இதன்​படி நெடுஞ்​சாலை, ரயில்​வே, துறை​முகங்​களின் கட்​டமைப்​பு​கள் விரிவுபடுத்​தப்பட உள்​ளன. மேலும் பட்​ஜெட்​டில் டிஜிட்​டல் கட்​டமைப்​பு, எரிசக்தி திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு இருக்​கிறது.

தொழில் தொடங்க ஏது​வாக சூழல் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். உலக நாடு​களு​டன் தனி​யார் நிறு​வனங்​கள் போட்​டி​யிட வேண்​டும்.

பட்​ஜெட்​டுக்கு பிந்​தைய இணை​ய​வழி கருத்​தரங்​கு​கள் மிக​வும் முக்​கிய​மானவை. இந்த அமர்​வு​கள் வெறுமனே கருத்​துப் பரி​மாற்​றம் என்ற அளவோடு நின்று விடா​மல், பயனுள்ள சிந்​தனையைத் தூண்​டு​வ​தாக இருக்க வேண்​டும். பட்​ஜெட்டை அமல்​படுத்​தும்​போது ஏற்​படும் நடை​முறை சவால்​கள் குறித்து கருத்​தரங்​கில் கருத்​துகளை பரி​மாறிக் கொள்ள வேண்​டும். இதன்​மூலம் பொருளா​தார கொள்​கைகள், திட்​டங்​களை மேம்​படுத்த முடி​யும். பல்​வேறு பிரச்​சினை​களுக்கு எளி​தாக தீர்வு காண முடி​யும். இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here