Home விளையாட்டு செய்திகள் பிரைம் வாலிபால் லீக் நவ.30-ல் தொடக்கம்

பிரைம் வாலிபால் லீக் நவ.30-ல் தொடக்கம்

0

பிரைம் வாலிபால் லீக்கின் ஐந்தாவது சீசன் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் என போட்டி அமைப்பளார்கள் அறிவித்துள்ளனர். இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி கோவாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரைம் வாலிபால் லீக் தொடரானது, இந்தியாவின் முதல் டிவிஷன் வாலிபால் லீக் போட்டியாக சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் கிளப் அணிகள், தகுந்த விதிமுறைகள் மற்றும் தகுதி அளவுகோல்களுக்கு உட்பட்டு, மத்திய ஆசிய வாலிபால் சங்கம், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு, சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு ஆகியவற்றின் கிளப் அளவிலான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version