டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி!

0
11

டெல்லி கதீட்​ரல் தேவால​யத்​தில் நடை​பெற்ற கிறிஸ்து​மஸ் கொண்​டாட்​டத்​தில் கலந்​து​கொண்ட பிரதமர் மோடி பிரார்த்​தனை​யில் பங்​கேற்​றார்.

கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நேற்று உலகம் முழு​வதும் கோலாகலமாக கொண்​டாடப்​பட்​டது. இந்​தி​யா​விலும் பல்​வேறு கலாச்​சார பின்​னணி கொண்​ட​வர்​கள் ஒன்​றிணைந்து இவ்விழாவைக் கொண்​டாடினர். இதையொட்​டி, டெல்​லி​யில் உள்ள கதீட்​ரல் தேவால​யத்​தில் நேற்று காலை​யில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொண்​டார்.

டெல்லி மற்​றும் வட இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வந்​திருந்த ஏராள​மான கிறிஸ்தவ மக்​களு​டன் இணைந்து அவர் பிரார்த்​தனை​களில் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் திரு​விழாவுக்​குரிய மகிழ்ச்​சி, சிந்​தனை மற்​றும் ஒற்​றுமை​யைப் பிர​திபலிக்​கும் வகை​யில் பிரார்த்​தனை​கள், கிறிஸ்​து​மஸ் பாடல்​கள் மற்​றும் கீர்த்​தனை​கள் இடம்​பெற்​றன. மேலும், டெல்லி பிஷப் மேதகு பால் ஸ்வரூப் பிரதமருக்​காகச் சிறப்​புப் பிரார்த்​தனை செய்​தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “டெல்​லி​யில் உள்ள ‘தி கதீட்​ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்​ஷன்’ தேவால​யத்​தில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் காலை வழி​பாட்​டில் கலந்து கொண்​டேன். இந்த வழி​பாடு அன்​பு, அமைதி மற்​றும் கருணை ஆகிய காலத்​தால் அழி​யாத செய்​தி​யைப் பிர​திபலித்​தது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை​யின் உணர்வு நம் சமூகத்​தில் நல்​லிணக்​கத்​தை​யும் நல்​லெண்​ணத்​தை​யும் ஊக்​குவிக்​கட்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

முன்​ன​தாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில், “அனை​வருக்​கும் அமை​தி, கருணை மற்​றும் நம்​பிக்கை நிறைந்த மகிழ்ச்​சி​யான கிறிஸ்​து​மஸ் வாழ்த்​துகள். இயேசு கிறிஸ்​து​வின் போதனை​கள் நம் சமூகத்​தில் நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்​தட்​டும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here