கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை காலப்போக்கில் மாறும். இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் ‘காந்தாரா சாப்டர்-1’ படம் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ‘டிராகன்’, யாஷின் ‘டாக்ஸிக்’ படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த்.