மேலும் ஒரு மருத்துவரை தேடும் போலீஸார்

0
7

டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன் தொடர்​புள்​ளது தெரிய​வந்​துள்​ளது. அவர் தற்​போது தலைமறை​வாக இருக்​கிறார்.

தலைமறை​வாகி​யுள்ள அல் பலாஹ் பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன், ஏற்​கெனவே ஜம்​மு-​காஷ்மீரில் பணி​யாற்​றிய​வர் என்​பவரும், தீவிர​வாத நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டார் என்​ப​தற்​காக அவரை ஜம்​மு-​காஷ்மீர் துணை நிலை ஆளுநர் 2023-ல் பணிநீக்​கம் செய்​துள்​ளதும் தற்​போது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இவர் ஸ்ரீநகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை​யில் உதவி பேராசிரிய​ராக இருந்​தார் என்​பதும் தெரிய​வந்​துள்​ளது. அவரை நீக்​கியது தொடர்​பான ஆவணங்​களும் தற்​போது போலீ​ஸாருக்​குக் கிடைத்​துள்​ளன. அவரை போலீ​ஸார் தீவிர​மாகத்​ தேடி வரு​கின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here