சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி, ஏஜிஓஆர்சி அணியுடன் மோதியது.
இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் 30-வது நிமிடத்தில் கப்மின்லால் கோல் அடித்தார். தமிழக காவல்துறை அணி தரப்பில் 74-வது நிமிடத்தில் கணேசமூர்த்தி கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் சிறந்த வீரராக தமிழக காவல்துறை அணியை சேர்ந்த பாலமுருகன் தேர்வானார்.














