அவிமுக்தேஷ்வர் மீது போக்ஸோ வழக்கு பதிவு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்

0
10

உத்​த​ராகண்​டின் ஜோதிஷ்வர் மடத்​தின் சங்கராச்சாரி​யா​ராக இருப்​பவர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த். பிர​யாக்​ ராஜ் மகரமேளா புனித நீராடலின் ​போது அவரது ஆதரவாளர்​கள் மற்​றும் உ.பி. போலீ​ஸார் இடையே மோதல் ஏற்பட்​டது.

இதில் அவரது ஆதர​வாளர் படு​காயமடையக் காரண​மான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​திடம் வலி​யுறுத்​தி​னார். பலன் இல்​லாத நிலை​யில் மகரமேளாவை புறக்​கணிப்​ப​தாகக் கூறி அங்​கிருந்து வெளியேறினார்.

இந்​நிலை​யில், மகரமேளா​வில் தனது முகாமில் சீடர்​களாக இருந்த சிறு​வர்​களில் மூவரை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாகப் புகார் எழுந்​தது. இப்​பிரச்​சினை​யில் சங்​க​ராச்​சா​ரி​யார் மீது வழக்கு பதிவு செய்​யக் கோரி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி நிர்​மான் அறக்​கட்​டளை​யின் தலை​வர் அசுதோஷ் பிரம்​மச்​சாரி என்​பவர் போக்ஸோ நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

நீதி​மன்ற உத்​தர​வின்​படி அவி​முக்​தேஷ்வர் மீது பிர​யாக்​ராஜின் ஜுசி காவல் நிலை​யத்​தில் கடந்த வாரம் வழக்கு பதி​வானது. இதில், சங்​க​ராச்​சா​ரி​யாரின் உதவி​யாளர் முகுந்​தானந்த் பிரம்மச்சாரி மற்​றும் பெயர் தெரி​யாத மூன்று பேரும் சேர்க்கப்பட்டுள்​ளனர். இதையடுத்து ஜுசி போலீ​ஸார் 3 சிறுவர்கள் தங்​கி​யிருந்த ஹர்​தோய் சென்று விசா​ரணை நடத்தினர்.

அத்​துடன் அம்​மூவருக்​கும் மருத்​து​வப் பரிசோதனை​யும் நடத்தப்பட்​டது. இதில், சிறு​வர்​கள் பாலியல் ரீதி​யாக துன்புறுத்தப்பட்ட புகார் உறுதி செய்​யப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. இதனால், போக்ஸோ வழக்​கின் கீழ் அவர் கைது செய்​யப்​படு​வார் எனத் தெரி​கிறது. இதனால் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவிமுக்​தேஷ்வர் நேற்று முன்​ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here