Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுவன் தொடர்பான புகாரில் 19 வயது நர்சிங் மாணவி மீது...

வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுவன் தொடர்பான புகாரில் 19 வயது நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்குப் பதிவு

0
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுவன் தொடர்பான புகாரில் 19 வயது நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்குப் பதிவு
17 வயது சிறுவன் தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் 19 வயது நர்சிங் மாணவி மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெள்ளிச்சந்தை அருகே சிறுவன் தொடர்பான புகார் – இளம்பெண் மீது போக்சோ வழக்குப்பதிவு!

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் 4-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். தற்போது பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறுவன் நாகர்கோவிலுக்கு செல்லும்போது ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

அதைத் தொடர்ந்து 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள பூங்காவில் அடிக்கடி சந்தித்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. நர்சிங் மாணவியும் சிறுவனின் வீட்டுக்கு வந்து உடல் நலம் சரியில்லாத சிறுவனின் தாயை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மாணவி சிறுவனின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, சிறுவனிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்***மாக இருந்துள்ளார்.

இதையடுத்து நர்சிங் மாணவி கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடலில் மாற்றத்தை பார்த்த தாயார் மாணவியிடம் விசாரனை நடத்தினார். விசாரணையில் மாணவி சிறுவனுடன் பழகியதை கூறினார். இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நர்சிங் மாணவி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version