சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு

0
12

சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்த வலி​யுறுத்தி பாமக சார்​பில் டிச.17-ம் தேதி அன்​புமணி தலை​மை​யில் போராட்​டம் நடை​பெறுகிறது.

இதில் தவெக பங்​கேற்க, அன்​புமணி சார்​பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலா​ளர் ஆனந்த், நிர்​வாக குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் கே.ஏ.செங்​கோட்​டையன், இணை பொதுச் செய​லா​ளர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜ் ஆகியோரிடம் பாமக வழக்​கறிஞர் பாலு வழங்​கி​னார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக அரசு சாதிவாரிக் கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என வலி​யுறுத்தி பாமக சார்​பில் டிச.17-ம் தேதி சென்​னை​யில் மாபெரும் போராட்​டம் நடை​பெற இருக்​கிறது.

இ​தில் அனைத்து அரசி​யல் கட்​சிகள், சமூக இயக்​கங்​கள், சமூக அக்​கறை கொண்ட அமைப்​பு​கள் கலந்​து​கொள்ள வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி கடிதம் எழு​தி​யிருக்​கிறார்.

அந்​த வகை​யில், தவெக-​வும் இ​தில் பங்​கேற்க வேண்​டும் என்று கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது. தவெக​வின் முதல் மாநாட்​டில் இருந்தே சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்த கோரி வரு​கிறார்​கள். எனவே, இந்த போராட்​டத்​தில் கலந்​து​கொள்ள வேண்​டும் என்று அழைப்பு விடுத்​திருக்​கிறோம் என்று கூறி​னார்.

ஆதவ் அர்​ஜுனா கூறும்​போது, “சமூகநீதி பேசும் திமுக, சாதிவாரி கணக்​கெடுப்பு விவ​காரத்​தில் மத்​திய அரசு மீது குற்​றச்​சாட்டு வைக்கிறது. பாமக கடிதம் குறித்து கட்சித்தலை​வரிடம் தெரிவிக்​கப்​பட்டு கலந்​தாலோ​சித்து முடி​வெடுக்​கப்​படும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here