பயத்தால் பிரதமர் மக்களவைக்கு வரவில்லை: சபாநாயகருக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்

0
11

குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்மானம் மீது மக்​களவை​யில் பிரதமர் மோடி ஆற்ற வேண்​டிய உரை ரத்து செய்​யப்​பட்​டது.

இது குறித்து விளக்​கம் அளித்த சபா​நாயகர் ஓம் பிர்​லா, “காங்கிரஸ் பெண் எம்​.பி.க்​கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்​களில் ஈடு​படக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்​டாம் என பிரதமரை கேட்​டுக்​கொண்​டேன்” என்றார்.

இதுகுறித்து சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்​கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்​கிரஸ் பெண் எம்​.பி.க்​கள் எழு​திய கடிதத்​தில் கூறியிருப்பதாவது: நாடாளு​மன்ற விதி​முறை​களின்படி, குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் போது, ஆளும் கட்சி மற்​றும் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களை பேச அனு​ம​திக்க வேண்​டியது கட்​டா​யம். ஆனால் கடந்த 4 நாட்​களாக மக்​களவை​யில் எதிர்க்​கட்சி தலை​வர் பேச அனு​மதி மறுக்கப்படுகிறது. அரசு உத்​தர​வின் ​பேரில் இண்​டியா கூட்டணியைச் சேர்ந்த 8 எம்​.பி.க்​கள் இடை நீக்​கம் செய்யப்பட்டனர்.

இதற்கு நீதி கேட்டு நாங்​கள் உங்​களை சந்​தித்​த​போது, தவறு ஏற்பட்​டதை ஒப்​புக்​கொண்டு மாலை 4 மணிக்கு சந்​திக்​கும்​படி எங்​களிடம் கூறினீர்​கள். அதன்​பின்​னர், இந்த விவ​காரம் குறித்து அரசு பதி​லுக்​காக காத்​திருப்​ப​தாக தெரி​வித்​தீர்​கள். இது சபாநாயகரின் அதி​காரத்​தின் மீது பல கேள்வி​களை எழுப்புகிறது. ஆளுங்​கட்​சி​யின் நெருக்​கடிக்கு மத்​தி​யில் நீங்​கள் பணி​யாற்​று​வது தெளி​வாகிறது.

நாங்​கள் பிரதமரை முற்​றுகை​யிட முயன்​ற​தாக குற்றம்சாட்டுவது, எங்​கள் கவுர​வம் மற்​றும் நம்​பகத்​தன்மை மீதான தாக்​குதல். பிரதமர் மோடி மக்​களவைக்கு வராமல் இருந்ததற்​கு, எங்​களின் அச்​சுறுத்​தல் காரணம் அல்ல. எதிர்க்கட்சியை எதிர்​கொள்​ளும் தைரி​யம் அவருக்கு இல்​லை. இந்த அச்​சமே அவர் அவைக்கு வாராமல் இருந்​ததற்கு காரணம். மக்​களவை​யின் பாது​காவலர் என்ற முறை​யில் நெருக்​கடிகளுக்கு இடம் கொடுக்​​காமல்​ சுதந்​திர​மாக செயல்​படுவீர்​கள்​ என்​று நம்புகிறோம்​. இவ்​​வாறு ​அதில் கூறியுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here