மெலோனி நூலுக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

0
12

இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது. பிரதமர் மெலோனி​யின் வாழ்க்​கை​யில் பல நிகழ்​வு​கள் உள்​ளன. இதனால் இந்த நூல் மிக​வும் சிறப்​பாகிறது.

அவரது பயணம் ஊக்​க மூட்​டும் ஒன்​றாக​வும் வரலாற்​றுப் பெருமை வாய்ந்​த​தாக​வும் உள்​ளது. பிரதம​ராக மெலோனி பொறுப்​பேற்​ற​போது, அவர் எப்​படி செயல்​படு​வார் என்​ப​தில் சில ஊடகங்​களும் அரசி​யல் விமர்​சகர்​களும் சந்​தேகம் எழுப்​பினர். ஆனால், நாட்டு நலனுடன் உலக நலனை​யும் கவனத்​தில் கொண்டு அவர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார்.

பிரதமர் மெலோனி​யின் வளர்ச்​சி​யை​யும் தலை​மைத்​து​வத்​தை​யும் பல வழிகளில் புரிந்து கொண்டு பாராட்​டலாம். அதில், அவரது வாழ்க்கை கதைக்​கும் இந்​திய பாரம்​பரி​யங்​களில் ஆயிரம் ஆண்​டு​களாக வணங்​கப்​படும் நாரி சக்தி என்ற தெய்​வீக பெண் சக்​திக்​கும் வலு​வான தொடர்பு இருப்​பதை நான் காண்​கிறேன்.

இந்த நூல், இக்​கால அரசி​யல் தலை​வர் மற்​றும் தேசபக்​தரின் புத்​துணர்ச்சி தரும் வாழ்க்​கைக் கதை என பாராட்​டப்​படும் என்ற நம்​பிக்கை உள்​ளது. இந்த நூலுக்கு முன்​னுரை எழு​தி​யது எனக்கு மிகப்​பெரிய மரி​யாதை ஆகும். இது ஒரு சுயசரிதை மட்​டுமல்ல, அது அவரது மனதின் குரல் (மன் கி பாத் – வானொலி நிகழ்ச்சி பெயர்) ஆகும்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here