Home தேசிய செய்திகள் கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர்...

கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

0

கென்​-பெட்வா நதி இணைப்பு திட்​டத்தை பின்​பற்​றி, மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்​சினை​களுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்​கள் என மாநிலங்​களை பிரதமர் மோடி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

மத்​திய மற்​றும் மாநில அரசுகளின் முயற்​சிகளை தடை​யின்றி ஒருங்​கிணைப்​ப​தன் மூலம், திட்​டங்​களை சரி​யான நேரத்​தில் செயல்​படுத்​து​வதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு தகவல் மற்​றும் தகவல் தொடர்பு தொழில்​நுட்​பம் சார்ந்த பன்​முக தளம் பிரக​தி. இதன் 51-வது கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் 9 மாநிலங்​களை உள்​ளடக்​கிய ரயில்​வே, மின்​சா​ரம் மற்​றும் சாலைத் துறை​களைச் சேர்ந்த சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான 7 முக்​கிய​மான உள்கட்டமைப்பு திட்​டங்​களை பிரதமர் மோடி ஆய்வு செய்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பொதுத் திட்​டங்​களை செயல்படுத்து​வ​தில் ஏற்​படும் தாமதம், திட்​டச் செலவை அதிகரிப்ப​தோடு, அத்​தி​யா​வசிய வசதி​கள்மக்​களுக்கு சரி​யான நேரத்​தில் கிடைப்​பதும் தடுக்​கப்​படு​கிறது. எனவே, திட்​டங்​களை விரை​வில் முடிக்க வேண்​டும். நகரங்​கள், குடி​யிருப்பு பகு​தி​கள் மற்​றும் பொது நிறு​வனங்​கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மின் செலவை குறைக்க, எரிசக்தி பாது​காப்பை மேம்படுத்த நகர்ப்​புறங்​களில் வீடு​களின் மேற்​கூரை​யில் சூரிய மின்​சக்தி தகடு​கள் அமைக்​கும் திட்​டத்தை துரிதப்​படுத்த வேண்டும்.

‘தூய்மை இந்​தியா இயக்​கம் 2.0′ திட்​டம் மூலம் வெறும் உள்கட்டமைப்பை உரு​வாக்​கு​வதோடு நின்​று​வி​டா​மல், வழக்கமான கண்​காணிப்​பு, பொது​மக்​களின் பங்​களிப்பு மற்​றும் பல்​வேறு தரப்​பினரின் ஒருங்​கிணைப்பை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்​கள் தங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்சினை​களை ஒத்​துழைப்​பு, சரி​யான நேரத்​தில் வழங்​கப்​படும் அனு​ம​தி​கள் மற்​றும் தொழில்​நுட்​பம் சார்ந்த கண்​காணிப்பு ஆகிய​வற்​றின் மூலம் தீர்க்க வேண்​டும்.

இதற்கு மத்​தி​யப் பிரதேசத்​தின் கென் ஆற்​றில் வரும் கூடு​தல் நீரை, உத்​தரப்​பிரதேசத்​தின் பெட்வா நதி​யில் இணைக்​கும் கென்​-பெட்வா திட்​டத்தை ஒரு முன்​மா​திரி​யாக பின்​பற்ற வேண்​டும். நதி​கள் இணைப்​பு, நீர் பாது​காப்​பு, நிலத்​தடி நீர் செறிவூட்​டல் மற்றும் திறமை​யான பாசனம் ஆகிய​வற்றை ஒருங்​கிணைந்த முறை​யில் மேற்​கொண்​டு, நீண்டகால நீர் பாது​காப்பை மாநிலங்கள் உறுதி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version