அருணாச்சல், திரிபுராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

0
43

அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்​டம்​பர் 22-ல் அருணாச்​சலப் பிரதேசம் மற்​றும் திரிபுரா மாநிலங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அப்​போது இரு மாநிலங்​களி​லும் ரூ.5,100 கோடிக்​கும் அதி​க​மான பல மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​வார்.

மேலும், ஒரு பொது நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க உள்ள அவர் மக்​களிடம் உரை​யாற்ற உள்​ளார். அதன்​பிறகு, திரிபு​ரா​வுக்​கு புறப்​பட்டு செல்​லும் அவர் மாதா திரிபுர சுந்​தரி கோயி​லில் சாமி தரிசனம் செய்​கிறார். அக்​கோயி​லின் மேம்​பாட்டு பணி​களை​யும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்​ளார்.

அருணாசல பிரதேச சுற்​றுப்​பயணத்​தின்​போது, அம்​மாநிலத்​தின் பரந்த நீர்​மின்​சார திறனை பயன்​படுத்​திக் கொள்ள இட்​டாநகரில் ரூ. 3,700 கோடி மதிப்​புள்ள இரண்டு பெரிய நீர்​மின் திட்​டங்​களுக்கு பிரதமர் அடிக்​கல் நாட்​டு​வார். அதன்​படி, 240 மெகா​வாட் திறனில் ஹியோ நீர்​மின் திட்​டம் மற்​றும் 186 மெகா​வாட் திறனில் டாட்​டோ-I நீர்​மின் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இந்த இரண்டு திட்​டங்​களும் அருணாசல பிரதேசத்​தின் சியோம் துணைப் படு​கை​யில் உரு​வாக்​கப்​படும்.

9,820 அடி உ.யரத்​தில்.. தவாங்​கில் ஒரு அதிநவீன மாநாட்டு மையத்​துக்​கும் பிரதமர் மோடி அடிக்​கல் நாட்​டு​கிறார். தவாங்​கின் எல்லை மாவட்​டத்​தில் 9,820 அடி உயரத்​தில் அமை​யும் இந்த மையம் தேசிய மற்​றும் சர்​வ​தேச மாநாடு​கள், கலாச்​சார விழாக்​கள் மற்​றும் கண்​காட்​சிகளை நடத்​தவதற்​கான அனைத்து வசதி​களை​யும் கொண்​ட​தாக இருக்​கும். இது, இப்​பி​ராந்​தி​யத்​தின் சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத்தை ஊக்​குவிக்​கும்.

சுகா​தா​ரம், தீயணைப்பு பாது​காப்​பு, பணிபுரி​யும் பெண்​களுக்​கான விடு​தி​கள், இணைப்​பு​களை மேம்​படுத்​தல் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களுக்கு உதவும் வகை​யில் ரூ.1,290 கோடி மதி்ப்​புள்ள பல முக்​கிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களை​யும் பிரதமர் தொடங்கி வைக்​கிறார்.

இந்​தி​யா​வின் ஆன்​மிக மற்​றும் கலாச்​சார பாரம்​பரி​யத்தை பாது​காக்க அளித்த உறு​திப்​பாட்​டின்​படி திரிபு​ரா​வில் மதபாரி​யில் உள்ள மாதா திரிபுர சுந்​தரி கோ​யில் வளாகத்​தின் மேம்​பாட்டு பணி​களை பிரதமர் தொடங்கி வைக்​கிறார். இது திரிபு​ரா​வின் கோமதி மாவட்​டத்​தின் உதய்​பூர் நகரில் அமைந்​துள்ள பழமை​யான 51 சக்தி பீடங்​களில் ஒன்​றாகும்.

இந்த மேம்​பாட்டு திட்​டத்​தில், கோயில் வளாகத்​தில் மாற்​றங்​கள், புதிய பாதைகள், புதுப்​பிக்​கப்​பட்ட நுழை​வா​யில்​கள் மற்​றும் வேலிகள், வடி​கால் அமைப்​பு, ஸ்டால்​கள், தியான மண்​டபம், விருந்​தினர் தங்​குமிடங்​கள், அலு​வலக அறை​கள் புதிய மூன்று மாடி வளாகம் உள்​ளிட்​டவை அடங்​கும். இது சுற்​றுலாவை மேம்​படுத்​து​வ​தி​லும், வேலை​வாய்ப்பு மற்​றும் வணிக வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும், பிராந்​தி​யத்​தின் ஒட்​டுமொத்த சமூக-பொருளா​தார வளர்ச்​சிக்​கும் வழி​வகுக்​கும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here