Home மாநில செய்திகள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.2% பேர் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.2% பேர் தேர்ச்சி

0

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3, 47, 527 பேர் (93.19 சதவீதம்)

இந்த முறையும் வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்த தேர்வில் பங்கெடுத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 2,639. இதில் அரசுப் பள்ளிகள் 489. 

தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.

ஈரோடு – 98.87 சதவீதம்

சிவகங்கை – 98.05 சதவீதம்

கன்னியாகுமர் – 97.63 சதவீதம்

நெல்லை – 97.54 சதவீதம்

திருச்சி – 97 சதவீதம்

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. 3,412 மையங்​களில் 8.27 லட்​சம் மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். 150-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் கடந்த ஏப்.6 முதல் ஏப்​.20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

மாணவர்​கள் www.tnresults.nic.in மற்​றும் www.dge.tn.gov.in மற்​றும் results.digilocker.gov.in ஆகிய இணை​யதளங்​களில் தங்​களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய​வற்றை பதிவு செய்து தேர்வு முடிவு​களை அறிய​லாம்.

பள்ளி மாணவர்​கள் உறு​தி​மொழிப் படிவத்​தில் குறிப்​பிட்ட செல்​போன் எண் மற்​றும் தனித் தேர்​வர்​கள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பித்​த​போது வழங்​கிய செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி மூல​மாக​வும் தேர்வு முடிவு​கள் அனுப்​பப்​படும்.

இந்த ஆண்டு முதல்​முறை​யாக தமிழ்​நாடு மின்​ஆளுமை முகமை மூலம் வாட்​ஸ்​அப் செயலி​யில் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்​ளும் வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி,78452 52525 என்ற எண்​ணுக்கு வாட்​ஸ்​அப்​பில் ‘Hi’ என்று குறுந்​தகவல் அனுப்​பி, அடுத்​தடுத்து துறை பெயர், தேர்​வர்​களின் வகுப்​பு, தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய​வற்றை பதி​விட்​டு, தேர்வு முடிவு​களை அறிய​லாம். இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்​ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version