Home சினிமா செய்திகள் 5 நண்பர்களின் வாழ்வைப் பேசும் ‘பீட்சா பாய்ஸ்’

5 நண்பர்களின் வாழ்வைப் பேசும் ‘பீட்சா பாய்ஸ்’

0

ஐந்து நண்​பர்​களைப் பற்​றிய படமாக உரு​வாகி​யுள்ள ‘பீட்சா பாய்​ஸ்’ படத்​தில் சிவம் சங்​கர் நாயக​னாக அறி​முக​மாகிறார். அவருடன் சரத் லோகிதஸ்​வா, ஷோப்​ராஜ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்​பில் சங்​கர் கே.என். மற்​றும் சஹானா சங்​கர் தயாரிக்​கின்​றனர். கதை எழு​தி, இயக்​கி, இசை அமைத்​துள்​ளார் சேகர் கேசவ் சிரின். குரு பிர​சாத் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​தின் படப்​பிடிப்பு பெங்​களூரு​வில் நடை​பெற்​றது.

“சொந்த ஊரை விட்டு வெளி​யேறி, தங்​களுக்​கென வாழ்க்​கையை உரு​வாக்​கும் கனவு​களு​டன் 5 நண்​பர்​கள் பெங்​களூரு செல்கிறார்​கள். அங்கு அவர்​கள் சந்​திக்​கும் சவால்​கள்தான் படம். நட்பை மைய​மாகக் கொண்டகதை மற்​றும் பெங்களூரு​வின் சமகால நகரப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படம் பார்​வை​யாளர்​களுக்குப் புதிய அனுபவத்​தைக் கொடுக்​கும்” என்​றது படக்​குழு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version