மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக வசதிகள், பரிசோதனை முடிவுகள் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு மருத்துவக் குழுவினரால் வழங்கப்படும் சுகாதார சேவைகள் குறித்தும் அவர் விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு. நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
