4கே தொழில்​நுட்​பத்​தில் ரீரிலீஸ் ஆகிறது ‘அமைதிப்படை’

0
18

மணிவண்​ணன் இயக்​கத்​தில் சத்​ய​ராஜ், ரஞ்​சி​தா, குயிலி, கஸ்​தூரி உள்பட பலர் நடித்து 1994-ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம், ‘அமைதிப்படை’. அரசி​யல் நையாண்டி படமான இது, வரவேற்​பைப் பெற்​றது.

இப்​படத்​தின் வசனங்​கள் இப்​போது வரை டிரெண்​டிங்​கில் இருக்கின்றது. தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் களம் சூடு பிடித்துள்ள நிலை​யில், இன்​றைய அரசி​யல் சூழலுக்​கும் இப்​படம் பொருந்​தும் என்​ப​தால், 32 ஆண்​டு​களுக்கு முன்பு வெளி​யான ‘அமை​திப்​படை’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.

4கே தொழில்​நுட்​பத்​தில் டால்பி ஒலி​யுடன் ஸ்பேரோ சினி​மாஸ் கார்த்​திக் வெங்​கடேசன் வெளி​யிட இருக்​கிறார். இந்​தி​யா​வின் பிற பகு​தி​களுக்​கும் இக்​கதை பொருந்​தும் என்​ப​தால் தமிழ்​நாடு, ஆந்திரா, தெலங்​கா​னா, கேரளா, கர்​நாடகா ஆகிய 5 மாநிலங்​களில் வெளி​யிடத் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here