குமரி மலைவேர கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பத்துகாணி பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இன்று அதிகாலை ரவீந்திரன் என்பவர் வீட்டில் ஒரு மரம் திடீரென முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் ஒரு புற சுவர் சேதமடைந்தது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.














