படேல், ஸ்ரீராமுலு நினைவுநாள்: ஆந்திர முதல்வர் அஞ்சலி

0
21

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது:

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் பொட்டி ஸ்ரீராமுலு. உப்பு சத்யாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நினைவு நாளில் அவருக்கு தலைவணங்கி நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

அதேபோல், சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல். சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக பல சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர் படேல். அவரது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here