விமானங்களை போல ரயில்களிலும் பயணிகளின் சுமைகளுக்கு கட்டுப்பாடு

0
49

நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர். தற்​போது வீட்டு உபயோகப் பொருட்​களை தவிர்த்து வியா​பாரப் பொருட்​ளுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், இனி ரயில் பயணி​கள் அனை​வருக்​கும் சுமை கட்​டுப்​பாடு விதிக்​கப்பட உள்​ளது. தற்​போது விமானப் பயணி​களுக்கு குறிப்​பிட்ட எடைக்கு மேற்​பட்ட சுமை​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. இது​போல் ரயில் பயணி​களிட​மும் வசூலிக்க திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது.

இதற்​காக நாட்​டின் அனைத்து ரயில் நிலைய நுழை​வா​யில்​களி​லும் மின்​னணு எடை இயந்​திரங்​கள் வைக்​கப்பட உள்​ளன. இவற்​றில் எடை போடப்பட்ட பிறகே சுமை​கள் பிளாட்​பாரம் உள்ளே அனு​ம​திக்​கப்பட உள்​ளன. ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பொதுப் பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு தலா 35 கிலோ சுமை அனு​ம​திக்​கப்பட உள்​ளது.

இது, முன்​ப​திவு செய்​யப்​பட்ட ஸ்லீப்​பர் பெட்​டிக்கு 40 கிலோ, ஏசி 3டயர் பெட்​டிக்கு 50 கிலோ, ஏசி 2டயர் பெட்​டிக்கு 60 கிலோ, முதல் வகுப்பு பயணி​களுக்கு 70 கிலோ என அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. ரயில்​களின் அனைத்து வகைப் பெட்​டிகளி​லும் சுமை​களை வைப்​ப​தற்​காக தனி இடவச​தி​யும் செய்​யப்பட உள்​ளது.

ஓடும் ரயில்​களில் பயணச்​சீட்டு பரிசோனையைப் போல், சுமை​களின் எடைகளை​யும் தோராய​மாக சோதிக்​க​வும் திட்​ட​மிடப்​படு​கிறது. இந்த புதிய மாற்​றம் சோதனை அடிப்​படை​யில் உத்​தரபிரதேசத்தின் பிர​யாக்​ராஜ் ரயில் நிலை​யங்​களில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. இதில் தெரிய​வரும் குறை​களை சரிசெய்​து, இத்​திட்​டம் நாடு முழு​வ​தி​லும் அமல்​படுத்​தப்பட உள்​ளது.

ரயில் நிலை​யங்​களில் அனைத்து வகை​யானப் பொருட்​கள் விற்​பனை​யுடன் தரமான உணவு விடு​தி​களும் இடம்​பெற உள்​ளன. இதற்​கான கடைகள் விரை​வில் டெண்​டர் முறை​யில் ஒதுக்​கப்பட உள்​ளன. இந்​த ​மாற்​றங்​களால்​ ரயில்​வே துறை​யின்​ வரு​வாய்​ மேம்​படும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here