குளிர்காலம் வருவதால் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள்

0
139

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இக்கோயிலில் ராமர் குழந்தை வடிவமாக (ராம் லல்லா) காட்சியளிக்கிறார். அவருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குளிர்காலத்தின் அகான் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைக்கும் வகையில் க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும்இதர டிசைனர் உடைகளைஉடுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. மேலும் குழந்தை ராமருக்கு நைவேத்யமாக உலர் பழங்கள் படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here