இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹெச்ஆர்எக்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோவுக்கு வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘தப்பார்’ படத்தை இயக்கிய அஜித் பால் சிங் இதை இயக்குகிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத த்ரில்லர் வெப் தொடரான இதில், பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அலயா எஃப், சிருஷ்டி வஸ்தவா, ரமா சர்மா, சபா ஆசாத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் இதில் நடிக்கவில்லை என்றும் தயாரிப்பு பணியை மட்டுமே செய்கிறார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகையான பார்வதி திருவோத்து, தமிழில், பூ, மரியான், உத்தம வில்லன், தங்கலான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.