‘பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு: சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி திரைப்பட ஷூட்டிங் எப்போது?

0
27

‘மத​ராஸி’ படத்தை அடுத்​து, சிவ​கார்த்​தி​கேயன் நடிக்​கும் படம், ‘பராசக்​தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்​கரா இயக்​கும் இதில் ரவி மோகன், லீலா, அதர்​வா, பசில் ஜோசப், ராணா முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் தயாரித்துள்ள இப்​படத்​துக்கு
ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். ரவி கே.சந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

1960-களில் நடக்​கும் படமான இது, கல்​லூரி பின்​னணி​யில் நடக்​கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்​டது. அடுத்த ஆண்டு ஜன.14-ல் இந்​தப் படம் வெளி​யாக இருக்​கிறது. இதற்​கிடையே இந்​தப் படத்​தின் படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது.

இதையடுத்து சிவ​கார்த்​தி​கேயன் நடிக்​கும் படத்தை ‘டான்’ இயக்​குநர் சிபி சக்​கர​வர்த்தி இயக்​கு​கிறார். இதன் படப்​பிடிப்பு இம்​மாத இறு​தி​யில் தொடங்​கு​வ​தாக இருந்​தது. இந்​நிலை​யில் அடுத்த மாதம் முதல்​ வாரத்​தில் தொடங்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here