குழந்தைகளின் உலகத்தை சொல்லும் ‘பாராசூட்’!

0
196

நடிகர் கிருஷ்ணா தயாரித்து, நடித்துள்ள வெப் தொடர், ‘பாராசூட்’. ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு இளம் சிறார்களின் உலகைப் பற்றியதாக உருவாகியுள்ளது இந்த வெப் தொடர். குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டு மென கண்டிப்பு காட்டுகிறார்கள். இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதை ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார்.

ஸ்ரீதர் கே எழுதியுள்ள இந்த வெப் தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here