ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலிண்டா பென்கிக்கும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவும் மோதினர். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.
பெலிண்டா பென்கிக்குக்கு இது 10-வது டபிள்யூடிஏ டென்னிஸ் பட்டமாகும்.














