Home கன்னியாகுமரி செய்திகள் பளுகல்: தோட்டத்தை சூறையாடிய கும்பல் மீது வழக்கு

பளுகல்: தோட்டத்தை சூறையாடிய கும்பல் மீது வழக்கு

0

பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (62) விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா, காய்கறித் தோட்டம் அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜான் (63) அவரது மகன் ஜான் ஹெலின் மற்றும் கண்டால் தெரியும் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். 

தொடர்ந்து அங்குள்ள வேலியைச் சேதப்படுத்தியதோடு காய்கறிகள் மற்றும் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளனர். சேதமதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்டபோது அர்ஜுனனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் அர்ஜுனன் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜான் (63) அவரது மகன் ஜான் ஹெலின் மற்றும் கண்டால் தெரியும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version