அருமனை அருகே ஆறுகாணி, ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் அகில் (32). இவரது மனைவி ரம்யா (28). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா கணவரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கேரள மாநிலம் வெள்ளரடையில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் நேற்று (நவம்பர் 9) வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக ரம்யாவின் தந்தை சுரேந்திரன் ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இரண்டு குழந்தைகளின் தாயை தேடி வருகின்றனர்.