கேரளமாநிலம் கோழிக்கோடு பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர் விஜயன் (45). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 58 மாணவர்களுடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். பத்மநாபபுரம் அரண்மனையில் மாணவர்கள் ஐஸ் வாங்க சென்றனர். இதனை ஆசிரியர் விஜயன் தடுத்ததால், ஐஸ் வியாபாரி ஸ்ரீ ஹரி (27) என்பவர் அரிவாளால் ஆசிரியர் விஜயனை வெட்டினார். இந்த வழக்கு பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று ஸ்ரீஹரிக்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு அளித்தார்.














