குமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் சிவராமன் ஆசான் நினைவு வர்ம பயிற்சி மையம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தனித்தனி தலைப்புகளில் வர்ம பயிற்சி நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கான வர்ம பயிற்ச்சியில் வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட மூன்று விதமான நோய்களை அடிப்படையாக கொண்டு நோயாழிகளுக்கு வர்ம மருத்துவம் செய்ய கூடிய ரகசிய முறைகள், கற்பிக்கப்பட்டது. இதில் களரி ஆசான்கள், சித்த, ஆயூர்வேத, மருத்துவ குருகுல மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்தியசாலை நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் வர்ம பயிற்சி அளித்தார். இதில் சிவராமன் ஆசான் நினைவு வர்ம குருகுலத்தின் ரட்சாதிகாரி டாக்டர் விஜயன், கேரளா களரி ஆசான் மரியேத்திரன், உள்ளிட்டோர். கலந்து கொண்டனர். இந்த பயிற்ச்சி முகாமில் ஏராளமான மானவர்கள் பங்கேற்றனர்.