பாஜகவிடம் ரூ.200 கோடி பெற்றதாக புகார்: ஹுமாயூன் கபீருடன் கூட்டணியை முறித்தார் ஒவைசி

0
16

மேற்கு வங்​கத்​தில் அயோத்தி பாபர் மசூ​தியை போன்று புதிய மசூ​திக்கு அடிக்​கல் நாட்​டியதை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​ட​வர் ஹுமாயூன் கபீர்.

முர்​ஷி​தா​பாத் மாவட்​டம், பரத்​பூர் எம்​எல்​ஏ​வான இவர், ஆம் ஜனதா உன்​னயன் கட்சி (ஏஜே​யுபி) என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். மேற்கு வங்க தேர்​தலை​யொட்டி இக்​கட்​சி​யுடன் ஏஐஎம்​ஐஎம் கட்​சித் தலை​வர் அசாது​தீன் ஒவைசி கூட்​டணி வைத்தார். இந்​நிலை​யில் சமூக வலை​தளங்​களில் வைரலாகும் ஒரு ‘ஸ்​டிங் ஆபரேஷன்’ தேர்தல் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்​பாக திரிண​மூல் காங்​கிரஸ் வெளி​யிட்​டுள்ள ஒரு ரகசிய பதி​வில், மேற்கு வங்​கத்​தில் முஸ்​லிம் வாக்​கு​களை திசை திருப்ப பாஜக​விடம் ஹுமாயூன் கபீர் ரூ.1,000 கோடி பேரம் பேசி, ரூ.200 கோடி முன்​பணம் பெறு​வது போன்ற காட்​சிகள் தெரி​கிறது.இதையடுத்​து, ஹுமாயூன் கபீருடன் தனது கூட்​ட​ணியை முறித்​துக் கொள்​வ​தாக ஒவைசி அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவரது ஏஐஎம்​ஐஎம் கட்சி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘‘ஹு​மாயூன் கபீர் தொடர்​பான ரகசி​யப் பதி​வின் தகவல்​கள் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன.

இது, மேற்கு வங்க முஸ்​லிம்​களை அரசி​யல்​ரீ​தி​யாகப் பாதிப்​புக்​குள்​ளாக்​கு​வதை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது. முஸ்​லிம் சமூகத்​தின் கண்​ணி​யம் மற்​றும் நலன்​களை கேள்விக்​குள்​ளாக்​கும் எந்​தவொரு கருத்​துடனோ அல்​லது நடவடிக்​கை​யுடனோ எங்​களால் இணைத்​துக்​கொள்ள இயலாது. எனவே மேற்கு வங்க தேர்​தலில் தனித்து போட்​டி​யிடு​வோம்’’ என்று குறிப்​பிட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில் தன் மீதான புகாரை ஹுமாயூன் கபீர் மறுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், ‘‘இந்த ஸ்டிங் வீடியோ போலி​யானது. செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்​டது. எனக்கு எதி​ராக திரிண​மூல் கட்​சி​யினர் தீட்​டிய அரசி​யல் சதி இது. நான் எந்​தக் கட்​சி​யிட​மிருந்​தும் பணம் எதை​யும் பெற்​றுக்​கொள்​ள​வில்​லை’’ என மறுத்​துள்​ளார்.

இதுகுறித்து மாநில அமைச்​சர் பிர்​ஹாத் ஹக்​கீம் கூறுகை​யில், ‘‘கபீர் முஸ்​லிம்​களை பாஜக-​விடம் விற்​று​விட்​டார். மால்​டா, முர்​ஷி​தா​பாத் போன்ற மாவட்​டங்​களில் முஸ்​லிம் வாக்​காளர்​களை பிளவுபடுத்த பாஜக முயற்​சிக்​கிறது. இந்​து, முஸ்​லிம் மற்​றும் மத்​துவா சமூகங்​களை திசை​திருப்​பும் நோக்​கில், பி, சி என 2 அணி​களை பாஜக உரு​வாக்​கி​யுள்​ளது. அந்த வீடியோ​வில் பிரதமர் அலு​வல​கத்​தின் பெயரும் குறிப்​பிடப்​பட்​டுள்ள நிலை​யில், இதில் தொடர்​புடைய அதி​காரி​கள் மீது ஏன் வி​சா​ரணை நடத்​தப்​பட​வில்​லை. அமலாக்​கத்​துறை இவ்​விஷ​யத்​தில்​ மவுனம்​ சா​திப்​பது ஏன்​?” என கேள்​வி எழுப்​பி உள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here