Home உலக செய்திகள் இழப்பீட்டு தொகை தராததால் ஆத்திரம்: சீன அரசு அலுவலகத்தை பொக்லைன் மூலம் இடித்தவர் கைது

இழப்பீட்டு தொகை தராததால் ஆத்திரம்: சீன அரசு அலுவலகத்தை பொக்லைன் மூலம் இடித்தவர் கைது

0

நிலத்தை கையகப்​படுத்​தி​யற்​கான இழப்​பீட்​டுத் தொகையை தராத​தால் சீன அரசு அலு​வல​கத்​துக்​குள் பொக்லைன் இயந்​திரத்​துடன் புகுந்த நபர் அங்​கிருந்த கட்டிடங்களை இடித்து நொறுக்​கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அந்த வீடியோ​வில், சீனா​வின் ஷான்சி மாகாணம் சியான நகரின் சிக்​சி​யான் பகு​தி​யில் அமைந்​துள்ள பெங்​டோங் புதிய நகர அரசு சேவை மையத்​துக்​குள், 47 வயது நபர் பொக்​லைன் இயந்​திரத்தை ஓட்​டிச் சென்று நுழைவு வாயில் மற்​றும் அலு​வல​கக் கட்டிடங்களை சேதப்​படுத்​தி​னார்.

குறிப்​பாக, அரசு சேவை மையத்​தின் கண்​ணாடி வாசல்​கள், முகப்புப் பலகை, படிக்​கட்​டு​கள் என 6 இடங்​களில் பொக்​லைன் இயந்​திரத்​தைக் கொண்டு தகர்க்​கும் காட்​சிகள் பதி​வாகி​யுள்​ளன. ஒருமணி நேரத்​துக்​கும் மேலாக நீடித்த இத்தாக்​குதலில் அதிர்​ஷ்ட​வச​மாக யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை.

பாது​காப்பு கருதி உடனடியாக ஊழியர்​கள், பொது​மக்​கள் அவசரமாக வெளியேற்றப்​பட்​ட​தால் பெரும் உயிர்ச்​சேதம் தவிர்க்கப்பட்டது. பொக்​லைனை ஓட்​டிச்சென்று கட்​டிடத்​துக்கு சேதம் ஏற்படுத்தியவரை காவல்துறை​யினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version