ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

0
9

பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து தெரி​வித்​த​தாக​வும் அவர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

வழக்​கு​களை விசா​ரித்த எம்பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றம், ஹெச்​.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்​டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்​பளித்​தது.

இதை எதிர்த்து ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்​முறை​யீட்டு வழக்கில், ஹெச்​.​ராஜாவுக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்​டனையை நிறுத்தி வைத்​து, மாதத்​தின் முதல் வேலை​நாளன்று விசா​ரணை நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராக வேண்​டுமென்​று நிபந்​தனை விதித்​​தது.

இந்​நிலை​யில், உடல்​நலக்​குறைவு காரண​மாக நீதி​மன்​றத்​தி்ல் நேரில் ஆஜராக வேண்​டுமென்ற நிபந்​தனையை தளர்த்​தக் கோரி ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு

மனுவை விசா​ரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, நிபந்​தனையை தளர்த்​தி, ஹெச்​.​ராஜாவுக்​குப் பதிலாக அவரது வழக்​கறிஞர் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராக வேண்​டும் என உத்​தர​விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here