சென்னையில் மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் காவல்துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொது மக்கள் உடனடியாக அழைத்தால் போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து உதவுவார்கள் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க சென்னை போலீஸாரும் காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வசதியாக சென்னையில் 39 இடங்களில் காவல் மினி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வேப்பேரி (7824867234), சேத்துப்பட்டு (9384039045), அயனாவரம் (9498100052), அண்ணா சதுக்கம் (9498100024), நுங்கம்பாக்கம் (9498100042), எழும்பூர் (9498213703), ராயப்பேட்டை (9498118840), மயிலாப்பூர் (9498100041), கோட்டூர்புரம் (944444664), சாஸ்திரி நகர் (8939003299), வேளச்சேரி (9498122707), சைதாப்பேட்டை (9445967402), நீலாங்கரை (9498100174), துரைப்பாக்கம் (9962343724), பரங்கிமலை (9865166803), நந்தம்பாக்கம் (9080290477), பழவந்ததாங்கல் (8220295183), மடிப்பாக்கம் (8122426105), ஆதம்பாக்கம் (9629333366), மாம்பலம் (9498131375), கே.கே.நகர் (9498100191), எம்ஜிஆர் நகர் (9498100188), எஸ்பிளனேடு (9498199817), பூக்கடை (8122360906), வடக்கு கடற்கரை (9498100218), வண்ணாரப்பேட்டை (9498100224), ராயபுரம் (9498100232), புளியந்தோப்பு (8148239521), எம்கேபி நகர் (7548899151), பெரவள்ளூர் (9940191499) உட்பட சென்னையில் 39 இடங்களில் மினி கட்டுப்பாட்டு அறைகளை சென்னை போலீஸார் அமைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் காவல் துறையை அழைக்கும் வகையில் தனித்தனி செல்போன் எண்களையும் கொடுத்துள்ளனர். மேலும், அவசர தேவைக்கு காவல் கட்டுப்பாட்டு அவசர அழைப்பு எண்ணான 100-ஐ தொடர்பு கொள்ளவும் காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.














