எஸ்ஐஆர் பணிக்காக மேற்கு வங்கத்தில் ஆன்லைன் விசாரணை விரைவில் தொடக்கம்

0
18

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்காக மேற்​கு​வங்​கத்​தில் ஆன்​லைன் விசா​ரணை நடைமுறை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது.

மேற்​கு​வங்​கத்​தில் கடந்த நவம்​பர் 4ம் தேதி முதல் டிசம்​பர் 11ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்​றது. கடந்த டிசம்​பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 58,20,898 வாக்காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. மேலும் எஸ்​ஐஆர் படிவங்​களை முறை​யாக பூர்த்தி செய்​யாத 95 லட்​சம் பேருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டு உள்​ளது.

வாக்​காளர் பட்​டியலில் இடம் ​பெறாதவர்​கள், நோட்​டீஸ் கிடைக்​கப் பெற்​றவர்​கள் மாநில தேர்​தல் ஆணைய அலு​வல​கங்​களில் முறை​யிட்டு வரு​கின்​றனர். அவர்​களிடம் விசா​ரணை நடத்​தி, அவர்​களது ஆவணங்​களின் நம்​பகத்​ தன்​மையை தேர்​தல் அலுவலர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

மேற்​கு​ வங்​கத்தை சேர்ந்த புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் மற்​றும் மாணவர்​கள் பல்​வேறு மாநிலங்​களுக்கு இடம்​ பெயர்ந்து உள்ளனர். தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் அவர்​கள் நேரில் ஆஜராக முடி​யாத சூழல் உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு மேற்கு​ வங்​கத்​தில் ஆன்​லைன் விசாரணை நடை​முறையை தொடங்க மாநில தேர்​தல் ஆணையம் முடிவு செய்​துள்​ளது.

இது குறித்து மூத்த அதி​காரி​கள் கூறிய​தாவது: வெளியூரில் தங்​கி​யிருக்​கும் வாக்​காளர்​களுக்​காக ஆன்​லைன் விசா​ரணை நடைமுறையை தொடங்க உள்​ளோம். இதற்​காக விரை​வில் டிஜிட்டல் தளம் தொடங்​கப்​படும். இதில் வாக்​காளர்​கள் ஆன்லைன் வாயி​லாக ஆவணங்​களை சமர்ப்​பிக்​கலாம். விசாரணை நாளின்​ போது குடும்ப உறுப்​பினர்​களில் ஒரு​வர் நேரில் ஆஜராக வேண்​டும்.

சம்​பந்​தப்​பட்ட வாக்​காளர் ஆன்​லைன் வாயி​லாக விசா​ரணை​யில் பங்​கேற்று விளக்​கம் அளிக்​கலாம். சில தேர்​தல் அலு​வலர்​களின் (பிஎல்ஓ) நடவடிக்​கைகள் திருப்​தி​கர​மாக இல்​லை. தவறிழைக்கும் பிஎல்​ஓக்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்வாறு அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here